கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீற்றம் 08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வாசிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்று உலகளாவி பரவுவதற்கு சீனாவே காரணம், கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே தெரிவித்த அந்நாட்டினர் ஒருவவரை கண்டித்திருக்கிறது. மேலும் கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது. கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை சீனா உடனடியாக வெளியிடாததால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா நுண்ணுயிரி தொடர்பான தகவலை சீனா மறைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



