Show all

சவுதி அரேபியாவில் கலைநிகழ்ச்சியொன்றில், மேலை நாட்டு நடவடிக்கையொன்றை பின்பற்றிய பெண் கைது

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி அரேபியாவில் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உள்படப் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். பெண்கள் வெளியில் செல்ல அனுமதி, கார் ஓட்ட அனுமதி, ஓட்டுநர் உரிமம் பெற அனுமதி, வெளி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை காண அனுமதி எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தைப்  நகரில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியில், அந்நாட்டில் மிகவும் பிரபலமான பாடகரான மஜித்அல் மோஹன்திஸ் மேடையில் பாடிக்கொண்டிருந்தார். 

கீழே அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென மேடையேறி அந்தப் பாடகரை கட்டிப் பிடித்துள்ளார்.  இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சவுதியில் பொது இடங்களில் தனக்கு உறவில்லாத ஆணுடன் ஒரு பெண் பேசவே அனுமதி கிடையாது. அப்படி இருக்க பொது நிகழ்ச்சியில் மேற்கண்ட செயலை மேற்கொண்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரேபியாவின் பாடல் இளவரசர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் மோஹந்திஸ். இரான் நாட்டைச் சேர்ந்தவரான இவர் சவுதியின் குடியுரிமையும் பெற்றுள்ளார். மிகவும் பிரபலமான இவரின் கலைநிகழ்ச்சியில் நிகழ்ந்த மாறுபட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.