31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையில் பாண்டிகோவிலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கருத்துப் பரப்புதலைத் தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம். தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகிதான் தினகரன். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம். கொல்லைப் புறமாக சிலபேர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்கிறோம். என்று பேசினார் தமிழக முதல்வர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



