Show all

காவல் நிலையத்தில் உள்ள ஓர் அறையில் தூக்கிட்ட சிறுமி! எதனால்?

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காலை டெல்லியை சேர்ந்த 17 அகவை சிறுமி காவல் நிலையத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த சிறுமி வசிக்கும் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் சிறுமியை தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டனராம்.

அதற்கு சிறுமியின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதனால் அந்த சிறுமியை அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் கடத்தினராம். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் பக்கத்துக வீட்டுக்காரர்களிடம் சண்டையிட்டுள்ளனராம்.

இந்நிலையில் சனிக்கிழமை அன்று விகார் காவல் துறை ஸ்டேஷனுக்கு அந்த சிறுமி வந்துள்ளார். அங்கு காவலர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் அவரை காப்பகத்துக்கு அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே இன்று காலை அந்த சிறுமி காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு ஓடி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் கதவை உடைத்தனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டுக்கு சென்றால் அக்கம்பக்கத்தினர் தொல்லை தாங்கலை என்று காவல் நிலையத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம் சிறுமி

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.