Show all

தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அளித்த இன்ப அதிர்ச்சி! பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கும்; அமெரிக்காவில்.

அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அளித்த இன்ப அதிர்ச்சி! மாணவர்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித்! அங்கு பட்டம் பெற வந்த 400 மாணவர்களுக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி அளிக்கவிருக்கிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. வள்ளல் பெருந்தகையாளர். தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித்! பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மேடையில் உரையாற்றியபோது ஸ்மித் கூறுகையில்,  'இங்கு இருக்கும் 400 பட்டம் பெற்ற மாணவர்களின் கல்வி கடன்களில் மொத்த தொகையை நான் செலுத்துகிறேன் எனக் கூறி அந்த 400 மாணவர்களுக்கும் மிகப் பெரிய இன்பஅதிர்ச்சியை நல்கினார். இதனை அறிவித்த அடுத்த நொடி அரங்கமே அதிர பெற்றோரும், மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

கல்வி  கடனின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் சுமார் ரூ.278 கோடி) ஆகும். ஏற்கனவே ஸ்மித், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி)  உதவித்தொகையாக அவர் வழங்கியதும் குறிப்பிடத் தக்கது.

இது குறித்து கல்லூரியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'இந்தப் பரிசு கல்லூரி வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த நிகழ்வாகும். இதற்காக தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அவர்களுக்கு எங்கள் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித்தைப் பாராட்டி மகிழ்ந்தார்.
  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,159.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.