ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 ஆண்டு கட்டணம் விதித்ததிலிருந்து பார்வையாளர்கள் இல்லாமல் தூங்கி வழிகிறதாம் ஹாட்ஸ்டார் செயலி. ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 உறுப்பினர்களை வளைப்பதற்காம் பிக்பாஸ் பருவம் மூன்று! பார்வையாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி மீது அதன் பார்வையாளர்கள் கொலைவெறியில் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டதாம் விஜய் தொலைக்காட்சி நிறுவனம். ஆம்! சன்தொலைக்காட்சியுடனான போட்டியை எதிர் கொள்வதற்காக, ஹாட்ஸ்டார் செயலியில் நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் நேரலையாக காண்பதற்கு இலவசமாக தந்து கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சி ஆண்டுக் கட்டணமாக ரூ365 விதித்திருப்பதுதான் அந்தக் கோபத்திற்கான காரணம். அந்தக் கோபத்தை எளிதாக முறியடித்து, ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 உறுப்பினர்களை வளைப்பதற்காக கிடைத்த மிகப்பெரும் யோசனைதான், மிக அதிக பார்வையாளர்களை விஜய் தொலைக்காட்சிக்கு பெற்றுத் தந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் பருவம் மூன்று மீண்டும் கொணர்வது. இதை பார்வையாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது தீயாகி வருகிறது. அதே சமயம், வெற்றி பெற்றதாக விஜய் நிறுவனம் கருதினாலும், பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் பருவம் இரண்டில் முழுமையாக திருப்தியல்லை. விரைவில் வெளியீடாக விருக்கும் பிக்பாஸ் பருவம் மூன்றுக்கு பார்வையாளர்கள் நிறைய நிபந்தனைகளை விதித்து பதிவிட்டு வருகிறார்கள் இணையத்தில். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்காசன் தயாராகிவிட்டார். இந்த பருவத்தில் போட்டியாளர்கள் யார், யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். அதே சமயம் யார் வேண்டாம் என்பதிலும் அவர்கள் தெளிவாக உள்ளனர். தமிழர்கள்தாம் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்கள்தான் பங்கேற்க வேண்டும். தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர்களை போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டாம் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஹிந்தி வாவ், ஹிந்திக்கார பொண்ணு பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தமிழ் கற்கிறது. தமிழில் பேச முயற்சிக்கிறது என்ற பேச்சே வேண்டாம். ஒழுங்காக தமிழகத்தை சேர்ந்தவர்களை போட்டியாளர்கள் ஆக்குங்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள். கடந்த பருவம் கொடூர மொக்கையாக இருந்தது. அதனால் இந்தப் பருவமாவது விறுவிறுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,159.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.