எடப்பாடி- பன்னீர் ஆட்சியின் மீதான நாம்பிக்கையில்லா தீர்மானம் தேர்தல் முடிவையொட்டி மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து விலகவிருப்பதாக தெரிவித்திருப்பது எடப்பாடி பன்னீர் கூடாரம் காலியாகிறதா? ஏன்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிமுகவின் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் கட்சியில் இருந்து விலகுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில், அதிமுகவின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கட்சி தேர்தலைச் சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வியாழக் கிழமையன்று வெளியாகவுள்ள நிலையில் ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் கட்சியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.