Show all

பூமி நீர்க்கோளமாக மாறுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது! அடுத்த தலைமுறை நீரில் மிதந்து வாழப்பழகியாக வேண்டும்

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியனும், பூமியும் தோன்றிய காலத்தில் இருந்து  ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதுதான் இயங்கியல் நியதி. சூரியன் பூமியைச் சூடேற்றுவதும், பூமி தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்வதுதாம் அந்தப் போராட்டம். பூமி தன்னைக் குளிர்வித்துக் கொள்ள இருவகையான நிகழ்வுகளை மேற்கொள்கிறது. எளிமையான நிகழ்வாக பூமி மேற்கொள்வது: தன்னை செடி, கொடி, மரங்கள், உயிரினங்களை வளரவிட்டு அவைகளால் தன்னைப் போர்த்திக் கொள்வது. இரண்டாவது வகை வன்முறை நிகழ்வாக புயல் மழைக்கு காரணமாகி தன்னைக் குளிர்வித்துக் கொள்வது.

மனிதர்களாகிய நாம் இயற்கையை அழித்து, வாகணங்கள், தொழிற்சாலைகளால், நாமும் சேர்ந்து சூரியனுக்கு ஆதரவாக பூமியைச் சூடேற்றும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறோம்.

பூமி தன்னைக் குளிர்வித்துக் கொள்ள மூன்றாவது நிகழ்வாக எடுக்க விருக்கிற அதிபயங்கர நிகழ்வு தன்னை நீர்க்கோளமாக மாற்றிக் கொள்வதுதான். அதற்கான ஆயத்தப் பணிகளை பூமி தொடங்கி விட்டதைக் காட்டுவதே தற்போது நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றம். ஆர்ட்டிகா, அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது. மழைக் காலங்களில் கூடுதல் மழை, வெள்ளம், புயல். இவைகள் பூமியை நீர்க் கோளமாக்குவதற்கான நடவடிக்கைகள். இவை என்னமோ பார்ப்பதற்கு நமக்கான பாதிப்பாக இருக்கலாம் ஆனால் பூமி சூரியனிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான நிகழ்வு இது.

அடுத்த தலைமுறை உறுதியாக நீர்க்கோள புமியில்தான் வாழ வேண்டியிருக்கும். நீரில் மிதந்து கொண்டே வாழும் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு சில ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழ்வான். தரைவாழ் உயிரினங்கள் முற்றாக அழிந்து போகும். 

மீண்டும் பூமி நன்றாகக் குளிர்ந்து, பனிப்பாறைகள் இறுகி பூமியில் தரைப் பகுதிகள் தென்படும். காடுகள், தரைவாழ் உயிரினங்கள், மனிதர்கள் தோன்றுவோம். பலஇலட்சம் ஆண்டுகள் இந்த நிகழ்வு தொடரும். மனிதன் மீண்டும் தன் அறிவு வளர்ச்சியால், சூரியனோடு சேர்ந்து கொண்டு பூமியைச் சூடாக்கி நீர்க்கோளமாக மாற்றுவான். இதுதான் இயங்கியல் சுழற்சியென்றாலும். நாம் நம் தாயான பூமிக்கு ஆதாராவாக இருந்து நமது வாழும் நாளைக் கூட்டிக் கொள்ள முடியுமே என்பதுதாம் இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள்!  

மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், அடுத்த தலைமுறையில் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று, 400 பக்க அறிக்கையில், ஐநாஅவை கூறியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,936.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.