Show all

ஓர் ஆண்டுக்கு ஆகும் செலவு 693500000! முகநூல் நிறுவனர் மார்க் பாதுகாப்பிற்காக

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக 24 மணி  நேரத்திற்கு ரூ.19 லட்சம் செலவு செய்கிறது முகநூல் நிறுவனம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி தொழில்நுட்ப உலகை பரப்பரக்குள்ளாகிருக்கிறது ஈக்குலியார் என்ற ஆராய்ச்சி நிறுவனம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முகநூலின் பங்குகள் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. இச்சூழலில், மார்க்கின் பாதுகாப்பிற்காக 68 கோடிக்கு மேல் முகநூல் நிறுவனம் செலவு செய்துள்ள தொகையினை, 100 பெரு நிறுவன தலைவர்களுக்கு பாதுகாப்பிற்காக செலவு செய்ய முடியும் என ஈக்குலியார் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், மார்க் சக்கர்பெர்க்கின் பேலோஅல்டோ வீட்டில் மட்டும் சுழற்சி முறையில் 16 பணியாளர்கள் பாதுகாப்பிற்காக 24 மணிநேரம் ஈடுபடுவார்கள் என சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்க்கின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படும் தொகை அமேசான் நிறுவனத்தின் தலைவருக்கு  பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படும் தொகையை விட பல மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.