Show all

இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! வேதியியல் தாக்குதல் நடத்தப் போவதாகப் பேசியில் அறிவித்தவர்

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், 'இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீது வேதியியல் தாக்குதல் நடத்துவேன்' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், மிரட்டல் விடுத்த ஆசாமி மும்பையில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது. இதுபற்றி தேசிய பாதுகாப்பு படையினர் மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் செல்பேசி எண் அலைவரிசை மூலம் மர்மஆசாமி இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் மும்பை மைய தொடர்வண்டி நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் காசிநாத் மண்டல் அகவை22 என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், மும்பை வால்கேஸ்வர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் அறங்;கூற்று மன்றத்தில் அணியப் படுத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.