15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு சந்தையில், ஜியோவிற்கும் ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டியால், ஒரு ஜிபிக்கு ரூ100 வசூலித்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அநியாயக் கொள்ளையிலிருந்து வாடிக்கையாளர்கள் மீண்டார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த இரண்டு நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய வாய்ப்புகளை அறிவித்து வருகின்றன. இவர்களுக்கு இடையே உள்ள போட்டியில், வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெற்று வருகின்றனர். ஜியோவின் வருகைக்குப் பின்னர் சொல்ல வேண்டாம். 2ஜி பயனர்கள்; எல்லாம் 4ஜிக்கு மாறினார்கள். அத்துடன் கட்டணத் திட்டங்களில் திருப்;பும் தொகை, அன்பளிப்புகள் என ஜியோ அடுத்த பாய்ச்சலுக்கு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து. ஏர்டெல் நிறுவனம் சில குறிப்பிட்ட மிடுக்குப் பேசிகளை வாங்கினால் அதில், ஏர்டெல் சார்பில் திருப்பும்தெகை சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தது. இதுப்போல பல சலுகைகளை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவித்து வந்தனர். அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.597க்கு அனைத்து அழைப்புகள், சேதிகள் மற்றும் தரவுச் சேவைகள் 168 நாட்களுக்குத் தடையின்றி வழங்குகிறது. நடப்பு நிலையில் 84+84 நாட்களுக்கு ரூ800 வசூலித்து வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,865.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



