Show all

விரைவில் முடிவெடுக்கப் போகிறதாம் அமெரிக்க! இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உக்ரைனில் உருசிய ராணுவத் தலையீடு, அமெரிக்க அதிபர் தேர்தலில் உருசிய குறுக்கீடு செய்ததான குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால் உருசியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதனால், உருசியாவுடன், கச்சா எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு, ராணுவத் தளவாட வர்த்தகத்தை மேற்கொள்வதை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அந்த நாடுகள் மீதும் அமெரிக்கா தடை விதிக்கும் என்ற சூழல் உள்ளது.

இந்நிலையில், கடந்த கிழமை உருசிய அதிபர் புதின் இந்தியா வந்தார். அப்போது உருசியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு டிரயம்ப் ரக ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்திய-உருசிய ஒப்பந்தம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பொருளாதாரத் தடையில் இடம் பெறுமா? என்பதை இந்தியா விரைவில் தெரிந்து கொள்ளும். இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் உடன் இருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.