26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது இந்தியக் கல்விமுறை, அதுவும் குறிப்பாக, அரசு தமிழ்வழிக்கல்வி அல்லாத பாடத் திட்டங்கள் வெறுமனே அறிவைப் பயிற்றுவிக்கும் உலைக்கூடங்களாக இருக்கின்றனவேயன்றி, வாழ்க்;கைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் அன்புக் கூடங்களாக இல்லை. சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர், ஐஏஎஸ் அகாடமி எனும் இந்திய ஆட்சிப் பணித்துறையின் ஆட்சியாளர் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த மையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் சங்கர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சங்கர் தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.