இந்தியாவில், அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்கு, கூகுளின் மூலம் ரூ.75,000 கோடி முதலீட்டை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்து தமிழனுக்கான பொதுமை குணத்தை அடையாளங் காட்டியிருக்கிறார் சுந்தர் பிச்சை. 29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள் பாடுவார்கள்:- சிற்பம் சித்திரம் சங்கீதம் அந்த அடையாளத்தைத் தூக்கிப்பிடிக்கிறவராக- கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அவர்கள்- ஹிந்தியையே தொடர்ந்து கொண்டாடி வரும் ஆட்சியாளர்களையே கண்டுவருகிற இந்தியாவில், அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்கு, கூகுளின் மூலம் ரூ.75,000 கோடி முதலீட்டை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்து தமிழனுக்கான பொதுமை குணத்தை அடையாளங் காட்டியிருக்கிறார். ‘கூகுள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான எண்ணிம மேம்பாட்டு நிதியம்’ என 75,000 கோடி ரூபாயை இந்தியாவுக்காக ஒதுக்கியிருக்கியிருக்கிறது கூகுள். 5-7 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் இந்தத் தொகையை இந்தியாவில் முதலீடு செய்யும் கூகுள். உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் “இந்தியாவிற்கு கூகுள்” என்ற நிகழ்வ மூலம் இந்தியாவுக்காக வைத்திருக்கும் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அப்படி ஆறாவது முறையாக இன்று “இந்தியாவிற்கு கூகுள்” விழா நடந்தது. கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துகொண்ட இந்த நிகழ்வு இம்முறை மொத்தமாக இயங்கலையில் நடந்து முடிந்தது. முதலில் அறிமுக உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார் கூகுளின் இந்தியத் தலைவர் சஞ்சய் குப்தா. இந்தியாவில் கொரோனா சூழலில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்று சேர்வது தொடங்கி பல வழிகளில் கூகுள் எவ்வாறு மக்களுக்கு உதவி வருகிறது என எடுத்துக் கூறினார். கூகுள் பே மூலம் மட்டும் 120 கோடி ரூபாய் ‘தலைமை அமைச்சர் நலம்’ நிதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார். அவருக்கு அடுத்து ஆல்பாபெட் மற்றும் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை பேசினார். எண்ணிமப் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவதே கூகுளின் இலக்கு. அந்த வகையில், ‘கூகுள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான எண்ணிம மேம்பாட்டு நிதியம்’ என 75,000 கோடி ரூபாயை இந்தியாவுக்காக ஒதுக்கியிருக்கிறோம். 5 - 7 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் இந்தத் தொகையை இந்தியாவில் முதலீடு செய்வோம் என்று தெரிவித்தார். 1. அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது. இந்த முயற்சியில் தலைமைஅமைச்சருடனும், இந்திய அரசுடனும் இந்தியாவின் பல விதமான தொழில்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்" என்றார்.
‘தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்
சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்’ என்று.
2. இந்தியாவுக்கென இருக்கும் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிறுவுவது.
3. இந்திய வணிகங்களின் எண்ணிம மாற்றத்துக்கு பக்கபலமாக இருப்பது.
4. சமூக நலனில், அதாவது கல்வி, மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் தொழில்நுட்பங்களின் உதவியைக் கூட்டுவது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



