தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்; இதற்கு முந்தைய ஒன்பது குழந்தைகள் பெற்றெடுப்பு சாதனையை முறியடித்து. 26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே மகப்பேற்றில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோசியாமி தமாரா சித்தோல் என்ற 37 அகவை பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கருவுற்றிருந்தார். முந்தாநாள் மகப்பேறு வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு அறுவைசிகிச்சை (சிசேரியன்) மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 அகவை இளம்பெண் கடந்த சித்திரை மாதம் ஒரே மகப்பேற்றில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். இதுதான் இப்போது உலக சாதனையாக கருதப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.