27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த நடவடிக்கையின் விளைவாகவும், பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளை விட பெட்ரோல் மற்றும் டீசல் வணிகத்தில் அதிக வரிஇலாபம் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் அடாவடிகளால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்ட வண்ணமாய் உள்ளன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது. ஆனால் அது இப்போது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட விலைகளை நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று இலக்க எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், பல இடங்களில் மூன்று இலக்க எண்ணிக்கையை நோக்கி புற்றுவைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று மாற்றம் ஏதும் இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.