காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடுதான். அந்த நாட்டிற்கு இலவச தடுப்பூசி எல்லாம் ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே இந்த நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி விலை அதிகமாம்! எவ்வளவு தெரியுமா? வேதனையில் மக்கள் என்று செய்தி வெளியிட்டு இந்தியாவைக் கிண்டலடித்துள்ளது இலங்கை இயங்கலை இதழ் ஒன்று. 28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே இந்த நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி விலை அதிகமாம்! எவ்வளவு தெரியுமா? வேதனையில் மக்கள் என்று செய்தி வெளியிட்டு இந்தியாவைக் கிண்டலடித்துள்ளது இலங்கை இயங்கலை இதழ் ஒன்று. உலகிலே கொரோனா தடுப்பூசிக்காக எந்த ஒரு நாடும் பணம் பெறாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் தான் தடுப்பூசிக்கு பணம் பெறப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ துவங்கியது. இதையடுத்து அதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய இந்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு ஒரு தடவை 600 ரூபாய் என சீரம் நிறுவனமும், கோவாக்சின் ஒரு டோஸ் 1200 ரூபாய் என பாரத் பயோடெக் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது முன்னணி தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டுக்கு 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையிலும் கோவாக்சினுக்கு 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 18-44 அகவைக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழக்கப்பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஊரடங்கு போன்ற காரணத்தினால் மக்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது இந்த தடுப்பூசி விலை உயர்வு பெரும் வேதனையை கொடுத்துள்ளது.. மேலும், கொரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, என்று செய்தியில் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.