சென்னையில் ஒரு சமூகநல அறக்கட்டளை அவசர நிலை கொரோனா நோயாளிகளுக்குத், தானியை உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி வண்டியாக பயன் படுத்தி சேவையாற்றி வருகிறது. 28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி வண்டியாக சென்னையில் ஒரு சமூகநல அறக்கட்டளை அவசர நிலை கொரோனா நோயாளிகளுக்குத் தானியைப் (ஆட்டோ) பயன் படுத்தி சேவையாற்றி வருகிறது. இந்தச் சேவையை இவர்கள் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை 160 நோயாளிகளுக்கு அவசர நிலையில் உதவியுள்ளார்கள். வடசென்னையில் சமூக நல அறக்கட்டளை என்ற அமைப்பு தானியில் உயிர்வளி உருளை பொருத்தி சடுதிவண்டி சேவை செய்து வருகிறது. இந்த சேவை அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் சமூகநல அறக்கட்டளை சார்பில் தானியில் உயிர்வளி உருளைப் பொருத்தி சடுதிவண்டிச் சேவையை மக்களுக்காக தொடங்கியுள்ளனர். வடசென்னை பகுதி பொது மக்களிடம் இந்த சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வட இந்தியாவில் இந்த கொரோனா தொற்றுநோயால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலை தமிழகத்தில் குறிப்பாக வட சென்னையில் இருக்க கூடாது என்ற ஒரு நோக்கத்துடன் இந்த சேவையை இவர்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்தச் சேவையை இவர்கள் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை 160 நோயாளிகளுக்கு அவசர நிலையில் உதவியுள்ளார்கள். இந்த சேவையில் பட்டதாரி மாணவர்கள் சிலர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவசர காலத்தில் பொதுமக்கள் அவர்கள் கொடுத்துள்ள எண்ணை தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களிலே அந்த இடத்தில் சென்று அவர்களுக்கு தானியில் பொருத்தப்பட்டிருக்கும் உயிர்வளி முதலுதவியுடன் மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்ப்பது இவர்களுடைய பணியாக இருக்கிறது. இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள வசந்தகுமார் என்ற பொறியியல் மாணவர் கூறும்போது, மருத்துவம் தொடர்பாக எங்களுக்கு முழுமையாக தெரியாது. நாங்கள் பொறியியல் மாணவர்கள். ஆனால், ஓரளவுக்கு முதலுதவி செய்யும் பக்குவம் எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம் என்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.