17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக விமானி அபினந்தன் அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது 1.பாரட்டிற்குரியதா? 2.பயந்து விட்டதா பாகிஸ்தான்? 3.வரவேற்;பது நம்முடைய கடமையா? 4.வேறு வழியேயில்லை அவர்கள் விடுவித்துதான் ஆக வேண்டும்? என்று நான்கு வகையான வினாக்களை முன்னிறுத்தி தமிழர் நாடித்துடிப்;பை கணிக்க ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. யார்? எவர் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு அளிக்கக் கூடிய சான்றோர் பெருமக்கள்தாம் தமிழர்கள் என்று அந்த இயங்கலை இதழில் கருத்து கணிப்பில் வாக்களித்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். ஆம் 1.பாராட்டிற்குரியது என்று 75 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். 2.பயந்து விட்டது பாகிஸ்தான் என்று 2 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். 3.வரவேற்பது நம்முடைய கடமைதானே என்று 18 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். 4.பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லையே என்று 5விழுக்காட்டு பேர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அபிநந்தனை விடுவிப்பதால் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இம்ரான்கானிடம் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பாடம் கற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தானே விடுவிக்கிற இடத்தில் இருந்தும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்க மனமில்லாத பாஜக அரசு ஆட்சியில் உள்ள நிலையில், சிறிலங்கா அரசிடமிருந்து ஓற்றைத் தமிழக மீனவனைக் கூட மீட்க முயலாத பாஜக மோடி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், இப்படிப் போய் மாட்டிக் கொண்டு விட்டாரே தமிழக விமானி அபினந்தன் என்று ஒட்டு மொத்த தமிழகமும் பரிதவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் தலைமை அமைச்சர் அவர்கள் நாடளுமன்றத்தில்: நல்லெண்ண அடிப்படையில், நிபந்தனையின்றி அபினந்தனை விடுவிக்கப் போகிறோம் என்று அறிவித்த செய்தி தமிழர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். என்றவாறான செய்திகளும் இணைத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.