Show all

தாயகம் திரும்பினார் அபிநந்தன்! எல்லையில் உணர்ச்சி பொங்க வரவேற்பு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.

அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

அதன்படி இன்று பாகிஸ்தானின் லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். 

இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா வந்த அபிநந்தனுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் உள்பட வாகா எல்லையில் குவிந்திருந்த பொது மக்கள் உணர்ச்சி பொங்க ஆரவார வரவேற்பு அளித்தனர். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.