Show all

மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்! மோடியின் நேற்றைய மலேசியப் பயணத்தின் போது

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக நாடுகளின் ஆட்சி முறைகள் எப்படி உள்ளன. பாஜக இந்தியாவின் ஒற்றைக் கட்சியாக நிலை நிறுத்துவதற்கு எந்த மாதிரியான ஆட்சியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆய்வுக்காகவே மோடி அவர்கள் வலிந்து வலிந்து ஒரு நாடும் விடாமல் உலகத்தைச் சுற்றி வருவதாகச் சொல்லப் படுகிறது. அந்தவகைக்காக இந்த முறை மோடி அவர்கள் உலா சென்றுள்ள நாடு இந்தோனேசியா. இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக பயணிப்;பைத் தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார்.

இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கையொலி எழுப்பினர். 

மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,805. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.