18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன. பெற்றோர்கள் வாங்கித் தரும் புதுப்புத்தகங்கள், அவற்றின் நடுப் பக்கத்தை விரித்து நுகரப் போகும் இனிய மணம், அடுத்த வகுப்பு, தேர்ச்சி பெற்றதற்காக அல்லது அதிக மதிப்பெண் பெற்றதற்காக, பெற்றோர்கள் வாங்கித் தரப்போகும் பரிசின் பெருமிதம், புதிய ஆசிரியர்கள், மீளக் கிடைக்காத பேரின்பக் கனவுகளோடு மாணவ, மாணாக்கியர்கள் அடுத்த கட்ட பயணம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,805.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



