Show all

90விழுக்காட்டு பேர்கள் ஆதரவு! இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சுட்டிக்காட்டிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 

நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடந்தன. 

1) கைரானா: உ.பி.யில் உள்ள கைரானா மக்களவை தொகுதியில், ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் அபார வெற்றி பெற்றுள்ளார். பாஜக தோல்வி.

2)பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

3) பண்டாரா -கோண்டியா: மகாராஷ்டிராவில் பண்டாரா - கோண்டியா மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வீழ்ந்தது.

4) நாகாலாந்து மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி வேட்பாளர் முன்னிலை 

சட்டப்பேரவை தொகுதிகள்

1) நூர்பூர்: உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளார்.

2) ஜோகிஹாட்: பீகார் மாநிலம் ஜோகிஹாட் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் வெற்றி பெற்றுள்ளார்.

3) ராஜேஸ்வரி நகர்: கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றுள்ளார். பாஜக தோல்வி.

4) அம்பட்டி: மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

5) செங்கனூர்: கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் வெற்றி பெற்றார். பாஜக படுதோல்வி

6) மகேஷ்தாலா: மேற்குவங்க மாநிலம், மகேஷ்தாலா தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்; வெற்றி பெற்றார்

7) தாரலி: உத்தராகண்ட் மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாஜக வெறுமனே 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

8) ஷாகோட்: பஞ்சாப் மாநிலம் ஷாகோட் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

9) கோமியா: ஜார்க்கண்ட் மாநிலம் கோமியா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பபிதா தேவி வென்றுள்ளார்.

10) சில்லி: ஜார்கண்ட் மாநிலம் சில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சீமா தேவி வெற்றி பெற்றுள்ளார். 

இதைத் தவிர மகாராஷ்டிரா மாநிலம் பாலுஸ் கடேகான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி வென்றுள்ளார்.

இந்த நிலையில், நாடுமுழுவதும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக மக்கள் ஏராளமான கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதையே இடைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்று 10 மாநில இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார். அவர் கூறியது சரியா என்று ஓர் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆம் சரியானதுதாம் என்று 90 விழுக்காடு பேர்களும், தனிப்பட்ட கருத்து மற்றும் மிகையானது என்றும் ஐந்தைந்து விழுக்காட்டு பேர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வாக்கு பதிவு இயந்திரங்களை மக்களிடம் நம்பிக்கை பெறவைப்பதற்காக, வாக்குப் பதிவு இயந்;திரங்களில் கைவைக்காமல், பாஜக கௌரவ தோல்வி அடைந்;திருக்கக் கூடுமோ என்கிற ஐயமும் முன் வைக்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.