ட்ரம்ப் அலையையும்
மீறி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்
ராஜா கிருஷ்ணமூர்த்தி. அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் முதல் தமிழர். பராக் ஒபாமாவின் தொகுதியான இல்லினாய்ஸ் மாகாணத்தில்
வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.
இவர், ராஜபாளையத் தமிழர்; ஒபாமாவின் நண்பர். அவர்: என் அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். மனைவியும்
தமிழ்நாடுதான். அப்பா சுப்பிரமணியம் டெல்லியில் வேலை பார்த்தவர்; அமெரிக்காவில் பேராசிரியர்
பணி கிடைக்க, அங்கேயே தங்கிவிட்டோம். என் பெயரில் உள்ள ராஜா ராஜபாளையத்தைக் குறிக்கும்.
இன்றைக்கும் என் தொகுதி மக்களுக்கு ராஜா என்பது மிகவும் பிடித்த செல்லப்பெயர். குறைந்த
கட்டணத்தில் அனைவருக்கும் தரமான கல்வி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வளர்ச்சி,
மக்களைக் காக்கும் வகையில் மருத்துவ வசதி என்பதை எல்லாம் வலியுறுத்தி மக்களிடம் வாக்குக்
கேட்டேன். இனி என் பகுதி மக்களுக்கு, அவை அனைத்தையும் கொண்டுவரப்போகிறேன். வெற்றிபெறுவோம் என்ற பெரிய நம்பிக்கை இருந்தது.
இனவாதம் பேசியும் வெளிநாட்டு மக்களையும் வேற்று மதங்களையும் ஏடாகூட விமர்சனங்களும்
செய்தார் ட்ரம்ப். இந்த விஷயங்கள் ஹில்லரிக்குச் சாதகமாக இருந்தன. ஆனால், இவை அவரது
வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. ட்ரம்ப் உளறினாலும் அவரைத் தைரியமான தலைவராக மக்கள்
பார்த்தார்கள். தொழிலாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது அவர்
பேசிய பேச்சுகளில் இருந்து பல்டி அடிக்கிறார். ட்ரம்ப், இந்திய அமெரிக்கர்களிடம் நல்ல
மதிப்பு கொண்டிருக்கிறார். இந்திய அமெரிக்க வர்த்தகம் வளர உதவுவதாகவும் வாக்குறுதி
கொடுத்திருக்கிறார். அவர் பேசிய பேச்சில் இருந்து நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்வாரா
என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’ இல்லினாய்ஸ், ஒபாமாவின் தொகுதி. 1999-ம் ஆண்டில்
பராக் ஒபாமாவைச் சந்தித்தேன். அப்போது நடந்த தேர்தலில் தோற்றுவிட்டார். அதற்கு அடுத்து
2002-ம் ஆண்டு தேர்தலில் பராக் நின்றபோது, நான் தேர்தல் பணியாற்றினேன். அப்போது என்னைப்
பிரசார இயக்குநராக நியமித்தார். அவர் செனட் உறுப்பினராக வெற்றிபெற்றார். அடுத்தடுத்த
ஆண்டுகளில் அதிபர் தேர்தலில் அவருடன் இணைந்து பணியாற்றினேன். நல்ல நண்பர். இந்த முறை
இல்லினாய்ஸ் தொகுதியில் நிற்க, பராக் ஒபாமாதான் என்னை வழிமொழிந்தார். எனக்காக காணொளியில்
பேசி மக்களிடம் ஓட்டுகேட்டார். மக்களின் மனதில் உள்ள பிரச்னைகளை முன்வைத்து வாக்குகள்
கேட்டோம். வெற்றி பெற்றிருக்கிறேன். அமெரிக்கர்கள், தமிழர்களைப்போல் இருக்க வேண்டும்
என ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழர்களோ, அமெரிக்கர்களைப்போல் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
அமெரிக்கர்களுக்கு தமிழக உணவும் பண்பாடும் மிகவும் பிடித்திருக்கின்றன. அவர்கள் பீட்சா
போன்ற உணவுகளைத் தவிர்த்து, காய்கறி உணவுகளை விரும்புகிறார்கள். கூட்டுக்குடும்பம்
இல்லையே என ஏங்குகிறார்கள். ஆனால், நம் மக்கள் வேறு எதையோ பார்த்து மாறிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாழ்க்கை, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்,
ஒபாமாவின் ஆலோசகர் எனப் பல விஷயங்கள் இருந்தாலும், தமிழன்! எனச் சொல்லிக்கொள்வதில்தான்
எனக்கு எப்போதும் பெருமை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



