அதிமுக நிரந்தரமாக
தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அருமையானதொரு வாய்ப்பை- உருவாக்கித் தந்தனர்
சல்லிக் கட்டு அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழக இளைஞர்கள். நடுவண் அரசின் தந்திரங்களில் சிக்கி, போராட்டக்
களத்தில் காவல்துறை வன்முறையை ஏவி தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சீர்குலைத்துக்
கொண்டது அதிமுக அரசு. தற்காலிகமாக, தமிழக ஆட்சியுரிமை என்கிற அப்பத்தைக்
கைப்பற்ற பல்வேறு குழுக்கள் முயன்று வருகின்றன. இனி நாம்தாம் நிரந்தரம்
என்று திமுக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அடுத்தத்
தலைமைக்கு என்று தெரிவு செய்து வைத்திருந்த விஜயகாந்த் செல்லிழுக்குப் பட்டு சோகாப்பர்
ஆகிவிட்டார். அப்பத்தைப் பிரித்துக்
கொடுக்க நான் தயார் என்று மோடியரசு ...... நாக்கில் எச்சில் ஊற காத்துக் கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்கள்-
இனி தமிழகத்தில்
அமையப்போகும் புதிய அரசு தமிழர் நலனுக்கான அரசாக அமைய வேண்டுமே யென்று வெளியாகும் புதிய
படங்களின் வெற்றிக்கு கூட முயலாமல் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர் இணையத்தில்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



