Show all

ஜி-20 மாநாட்டில் மோடியுடன் தம்படம் எடுத்துக்கொண்டவர்! ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன் பற்றி கொஞ்சம் பேசலாமா!

ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வரும் வளர்முகநாடுகள்-20ன்  மாநாட்டில் சந்தித்தபோது.

14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டு கடந்து சென்ற தமிழப்; புத்தாண்டின் போது தமிழர்களுக்கு அவர் தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்தி.

ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமூக மக்களுக்கும், உலகம் முழுதும் உள்ள தமிழர்களுக்கும், எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு உங்களின் கடந்த கால பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

ஆஸ்திரேலிய நாட்டினராக, எங்களின் நிலத்தில் வாழ்கிறோம். எங்களின் கலாச்சாரம் பல்வேறு மாறுபாடு அடைந்துள்ளது. எங்களின் கலாச்சாரத்தை பிற கலாச்சாரங்களில் இருந்தே நான் கற்றுக் கொள்கிறேன். உங்களுடன் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை ஆதாரமாகக் கொண்டு வளமாக எங்களின் நாட்டை கட்டமைத்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தால் மாறுபட்ட கலாச்சாரம், பன்முகத் தன்மை கொண்ட சமூகத்துடன் நாங்கள் வாழ்வது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி தர வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்ம மோடி- பெருந்தகையாளர், ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசனுடன் தம்படம் எடுத்துக் கொண்டது சரி. அவரின் அணுகுமுறைகளை கற்றுக் கொண்டு இந்தியாவில் தமிழ் மக்களின் தனிப்பட்ட பண்பாடு, கலாச்சாரத்தையும், தமிழர்தம் மொழியையையும் தாமும் போற்றிக் கொண்டு முன்னெடுக்க வேண்டும் என்பதை உணர்வாரா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.