ஜப்பானின் ஒசாகா நகரில் வளர்முகநாடுகள்-20ன் மாநாடு நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார். 14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஸ்காட் மொரீசன் ஆஸ்திரோலியாவின் முப்பதாவது தலைமை அமைச்சராக பொறுப்பேற்று, பதவியில் உள்ளார். தற்போது ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வரும் வளர்முகநாடுகள்-20ன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளார் ஸ்காட் மொரீசன். மாநாட்டில் ஸ்காட் மொரீசன், இந்தியாவில் இருந்து சென்ற மோடியுடன் தம்படம் எடுத்து அந்தப் படத்தை தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் அரசத் தலைவர்களாகப் பட்டியலிடப் படுபவர்கள் கீழ்கண்டவர்கள். அந்தப் பட்டியலில் தம்படம் எடுத்துக் கொண்ட இசுக்காட் மொரிசனும், நம்ம மோடியும் இடம் பெறுகின்றனர். இந்த அடிப்படையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கவரப்பட்டிருக்கலாமோ அல்லது வேறு ஏதாவது காரணம் பற்றியோ! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,198.
திமித்ரி மெட்வெடெவ், உருசியாவின் தலைமை அமைச்சர்
அங்கெலா மேர்க்கெல், ஜெர்மனியின் வேந்தர்
தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் தலைமை அமைச்சர்
சின்சோ அபே, ஜப்பானின் தலைமை அமைச்சர்
பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் தலைமை அமைச்சர்
ஜஸ்டின் துரூடோ, கனடாவின் தலைமை அமைச்சர்
இசுக்காட் மொரிசன், ஆத்திரேலியாவின் தலைமை அமைச்சர்
நரேந்திர மோடி, இந்தியாவின் தலைமை அமைச்சர்
கியுசெப்பே கோன்டே, இத்தாலியின் தலைமை அமைச்சர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



