ஜெகன் மோகன் முதல்வர் பதவியேற்றதிலிருந்து தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக போல ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் பகை முற்றி வருகிறது. ஆனால் ஆந்திரமக்கள் நடப்பில் தமிழக மக்கள் போலவே சந்திரபாபு- ஜெகன் இருவருக்கும் ஆதரவாக இயங்கி வருவதாகவே தெரிகிறது. 14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்திரபாபு, புதிய வீடு கட்டுவதற்காக தங்களின் நிலத்தை தர கிராம உழவர்கள் முன் வந்துள்ளனர். ஆனால், தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன்- சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக வீட்டை காலி செய்யும்படி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, கவனஅறிக்கை அனுப்பி இருந்தார். ஜெகன் மோகன் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் சந்திரபாபுக்கு ஏராளமான நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக பிரஜா வேதிகா என்ற ஆலோசனை கூட்ட கட்டடத்தை இடிக்க ஜெகன் மோகன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள சந்திரபாபுவின் வீட்டையும் இடிக்க உத்தரவிட்டார். சந்திரபாபுவுக்குக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் வீடு உள்ள உந்தவல்லி பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த உழவர்கள், அவருக்கு நிலம் தர முன்வந்துள்ளனர். சந்திரபாபு, தலைநகரை விட்டு வெளியேற கூடாது என சில உழவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சில உழவர்கள் 4800 ச.அடி பரப்பளவிலான நிலத்தை சந்திரபாபுவிற்கு அளித்து, சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இந்த உழவர்கள்;, ஆந்திராவின் புதிய தலைநகரை அமைப்பதற்காக 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அரசுக்கு அளிக்க முன்வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவண் அரசிலோ: ஆண்ட காங்கிரஸ் கட்சியும் சரி, தற்போது ஆளும் பாஜகவும் சரி மாநில உரிமைகளைப் பிடுங்குவதில், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாவே இருக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,198.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.