Show all

கொரோனா சல்லிக்கட்டில் தும்பைப் பிடித்த நாடுகள் மகிழ்ச்சியில்! வாலைப் பிடித்து வம்பில் மாட்டிக் கொண்டன 188 நாடுகள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில். 

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளன சில நாடுகள். 
சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று சில நாடுகளில் கட்டுக்குள் உள்ளன. 188 நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்துவரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே இல்லை. அந்த நாடுகள்:
கிரிபாட்டி
மார்ஷன் தீவுகள்
மைக்ரோனேசியா
நாரு
வட கொரியா
பலூ
சமோ
சாலமன் தீவுகள்
டோங்கா
டர்க்மெனிஸ்தான்
டுவாலு
வனுவாடு
ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பின்றி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நெதர்லாந்து, இந்தோனேசிய தீவுகள், ஆஸ்திரேலியா பகுதிகளில் கொரோனா தொற்று மிகக் குறைவாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முதன்மையான காரணம் மேற்கண்ட நாடுகள் கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே விழித்துக்கொண்டது மட்டுந்தாம். கொரோனா பரப்புகிற ஒருவர் கூட தங்கள் நாட்டிற்குள் வராமல் பார்த்து கொண்டார்கள். உலத் தொடர்பை முற்றிலும் புறக்கணித்தார்கள்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில். 
இந்தக் குறளுக்கே உடைமையுடைய தமிழ் மண்ணில் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்கப் பட்ட போதும், விமானத்தை நிறுத்தும் அதிகாரம் இன்மையால் நாமும் துன்பத்தில்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.