ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையான வணிகத்தில் போராடும் ஒரே நிறுவனமான ஏர்டெல், அதில் வாகை சூடியுள்ளது. அதற்கெல்லாம் சரிப்பட்டு வராத வடிவேலுவாக ஜியோ பகடியாடப்பட்டு வருகிறது. 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்புத் துறை களத்திற்கு வந்ததில் இருந்து, இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் கண்ணீர் விடாத குறையாகத் தாம் வணிகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சில நிறுவனங்கள் இழுத்து மூடிச் சென்றுவிட்டன. அதில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையான வணிகத்தில் போராடும் ஒரே நிறுவனம் ஏர்டெல். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையை மொத்தமாக வளைக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு, கடைசி வரை வழி விடாமல், மேலும் முதலீடு செய்து தன் வணிகத்தை விட்டுக் கொடுக்காமல் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ‘சராசரி ஒருநபர் வருமானம் ஈட்டலில்’ ஏர்டெல் வாகை சூடி வருகிறது. அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட வடிவேலு கதையாக ரிலையன்ஸ் ஜியோ குழம்பி நிற்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் அதிக வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதும், புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பதும் எந்த அளவுக்கு முதன்மையோ அந்த அளவுக்கு இந்த ‘சராசரி ஒருநபர் வருமானம் ஈட்டல் முதன்மையானது என்பதில் எப்போதும் கருத்தாக இருந்து வருகிறது ஏர்டெல். கடந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ‘சராசரி ஒருநபர் வருமானம் ஈட்டலில்’ 154 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆனால் ஜியோவின் ‘சராசரி ஒருநபர் வருமானம் ஈட்டலில்’ 131 ரூபாயாகத் தான் அதிகரித்து இருக்கிறது. இந்த ‘சராசரி ஒருநபர் வருமானம் ஈட்டலில்’ ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவை தூக்கிச் சாப்பிட்ட செய்தியை, தொலைத்தொடர்புத் துறையில் மிகவும் நேர்மறை முதன்மைப்பாடாகப் பார்க்கிறார்களாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



