13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் அவையில், சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின், 73வது மாநாடு நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உட்பட 193 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கு, பிராந்திய ஒத்துழைப்பும், சமூக அமைதியும், பாதுகாப்பும் முக்கியம். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார். இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை, அமைச்சர் ஷா முகமது குரோஷி பேசத் தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, சுஷ்மா சுவராஜ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, ஷா முகமது குரோஷி பேசியதாவது: பிராந்திய ஒத்துழைப்பு குறித்து, சுஷ்மா பேசினார். அதைப்பற்றி பேச, உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், சுஷ்மா பாதியிலேயே வெளியேறினால், பிராந்திய ஒத்துழைப்பு குறித்து எப்படி முடிவு எடுப்பது. ஒரு நாட்டின் அணுகுமுறையால், சார்க் அமைப்பின் முதன்மை நோக்கம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,925.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



