41 பேரை பலி கொண்ட, சூப்பர் ஜெட் 100 என்கிற இரஷ்ய விமானம், ஓடுதளத்தில் பயங்கரத் தீயுடன் ஓடிய காணொளி இணைத்தில் தீயாகி காண்போரின் நெஞ்சத்தை உறைய வைக்கிறது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாஸ்கோவிலிருந்து வடக்கு ரஷ்ய நகரமான மர்மன்சுக்கு சூப்பர் ஜெட் 100 என்கிற விமானம் வழக்கம் போல நேற்றும் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட, அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர் விமானிகள். அதற்குள் விமானத்தின் பின்பகுதியில் தீ பற்றிக்கொள்ள, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும், இந்த விமான விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிலர், மோசமான வானிலையே இந்த விமான விபத்துக்குக் காரணம் என்கின்றனர். எகோரோவ் என்ற பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தை மின்னல் ஒன்று தாக்கியது என்றார். விமானம், ஓடுதளத்தில் பயங்கர தீயுடன் தரையிறங்கும் காட்சிகள் தற்போது இணையங்களில் பரவிவருகின்றன. இந்நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் இரண்டு முறை வட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாகத் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.
தீ மளமளவெனப் பரவியது. அந்த சூப்பர் ஜெட் 100 விமானம் தீயுடன் ஓடுதளத்தில் ஓடி நின்றது. அவசர கால வழிமூலம் சில பயணிகள் தப்பினர். 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என 78 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில், சுமார் 37 பேர் பாதுகாப்பாக இருப்பதாக, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்தில் 41 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனினும் தற்போது வரை இந்த விபத்துக்கான காரணம்குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விமானிகள், விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்கள் என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.