Show all

ஒன்னரை நிமிடம் நடந்த வழக்கு! 3சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பேரவைத்தலைவரின் கவனஅறிக்கைக்கு தடை

அதிமுக தலைப்பில் ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும் எடப்பாடி- பன்னீர் அணியினர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்காக, ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேரவைத்;தலைவர் தனபால் கவனஅறிக்கை அனுப்பினார். இந்தக் கவன அறிக்கைக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் தடை

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்னும் 17 நாட்களில் முடிவு தெரியவிருக்கிற, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தாங்கள் தோற்றுப் போய் பெரும்பான்மை இழந்தாலும், ஆட்சியைத் தக்க வைக்கும் யுக்தியாக, சட்டமன்ற உறுப்பினர் பலத்தை குறைத்திட ஏதுவான நடவடிக்கையாக, அதிமுக தலைப்பில் ஆளும் உரிமையை பெற்றிருக்கும் எடப்பாடி- பன்னீர் அணியினர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்காக, ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேரவைத்;தலைவர் தனபால் கவனஅறிக்கை அனுப்பினார்.

இந்த கவனஅறிக்கையை எதிர்த்து ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் பேரவைத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக, அந்த கவனஅறிக்கைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்த விசாரணை வெறும் ஒன்னரை நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.