Show all

நீட் என்ற தலைப்பில் மாணவிகள் அலங்கோலப் படுத்தல்!

வழக்குரைத்தவளின் பெருமையைக் கொண்டாடுவது தமிழர் தொன்மம். குற்றமற்றவளை நெருப்பில் இறங்கச் செய்தது வடவர் தொன்மம். மருத்துவக் கல்வியைத் தங்கள் கையில் எடுத்தவர்கள், சிலம்பைப் பிடுங்கிக் கொண்டு மாணவிகளை அலங்ககோலப் படுத்தி நீட் என்ற நெருப்பாற்றில் நீந்தச் செய்யும் அவலம். பெற்றோர் கண்ணில் உற்பத்தியாகும் ஆறுகள்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகள் உட்பட, நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் என்ற நெருப்பாற்றில் தங்களை நிரூபிக்க வந்தனர்.
பல கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுதும் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர் மாணவ- மாணவிகள். 

கம்மல், ஹேர் க்ளிப், மூக்குத்தி, உயரக் காலணிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் என கடும் கட்டுப்பாட்டுகளுடன் அனுமதிக்கப்பட்டதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டைகளை வெட்டிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர் ஒருவரின் பேண்டின்  மெட்டல் ஷிப் அகற்றப்பட்டது சோதனையின் உச்சக்கட்டம் என்று பெற்றோர்கள் புலம்பினர். இதையெல்லாம் செய்ய கடந்த முறை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு வழங்கப் பட்டிருந்தது. இந்த முறை தேசிய தேர்வு முகாமைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து காவல்துறை, துணை இராணுவம், இராணுவம் என்று வழங்கப் படுமோ என்று மக்கள் தங்கள் அச்சத்தை பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தால் கடைசியில் பாஜக கட்சியே இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் வியப்படைவதற்கில்லை என்று பதிவிடுகிறார் வெறுப்பின் உச்சத்தில் ஓர் இளைஞர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.