உலகில் இந்தியாவில், இலங்கையில் மட்டும் மதங்களுக்கு எதிரான கேடயமாக இருந்து வருகிறான் தமிழன். அந்தத் தமிழனத்தை முற்றாக ஒடுக்க நினைத்து, உலகப் போர்க்கருவிகளோடு, உலகம் நித்தம் நித்தம் அஞ்சி அஞ்சி செத்துக் கொண்டிருக்கிற மத தீவிரவாதங்களுக்கு வழிஅமைத்து விட்டது இலங்கை. அமெரிக்கா சட்டாம் பிள்ளையாகி எச்சரிக்கிறது இலங்கையை: இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பாம். 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் எந்த இனப்போராட்டமும் தனக்கான ஒரு நாடு அமைத்துக் கொள்ளும் நோக்கம் குறித்ததாக மட்டுமாகவே இருந்தது. ஆனால் மதங்கள் நிகழ்த்திய போர்களோ நாடு விரிக்கும் எண்ணத்தில், இரண்டு உலகப் போர்களுக்கும், ஏராளமான அழிவுகளுக்கும் காரணமாகி நின்றன. ஆனாலும் அதன் போர்பசி தீராமல், இன்றும் உலகளாவி, ஒட்டுமொத்த உலகம் அஞ்சிக் கொண்டிருக்கும் தற்கொலை குண்டு வெடிப்பு, தீவிரவாதம் என்று அதிர்ச்சியூட்டவே காத்திருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக மதவாதத்தில் இருந்து இந்தியாவும், இலங்கையும் தப்பித்து வந்து கொண்டிருந்ததற்கான பெருங்காரணம் தமிழினத்தின் பண்பாடு இங்கே ஆளுமை பெற்றிருப்பதுதாம். உலகில் தமிழன் மட்டுந்தாம், துப்பாக்கி ஏந்தி வந்தவனை, பொங்கல் கொடுத்து மாமா மச்சான் என்று ஊண்புலவு தட்டை ஏந்த வைத்தவன். உலகில் தமிழன் மட்டுந்தாம், வணிகம் செய்ய வந்து நாட்டை பிடித்தவனை, பொங்கல் கொடுத்து தன் சமாதியில், 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என்று எழுத வைத்தவன். இந்தியாவில் அதிகாரம் என்னவோ ஆரியர் கையில் இருந்தாலும், தமிழனமே! இந்தியாவின், பொருளாதாரம், தொன்மை, மற்றும் பண்பாட்டு மூலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையோ அங்கே உலகின் மூத்த இனமான தமிழினத்தைப் போற்றி பாதுகாக்கும் வாய்ப்பை இழந்தது. அறிவார்ந்த தமிழினத்தை முடமாக்க, உலகினரிடம் கையேந்திய போது: இலங்கைக்கு ஓடியோடி ஒத்துழைத்தன உலகநாடுகள்; அதில் இந்தியாவின் பங்கு பேரளவினதாக அமைய தமிழர் விரோத (நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும் பெரும்பான்மை வகிக்கும்) பார்ப்பனிய சக்திகள் முன்னெடுத்தன. அதற்கு சிங்களவர்களுக்கு கிடைத்த தற்காலிக பயன்: பத்து, இருபது ஆண்டுகள் அமைதி. தங்களை உலகாள வைத்த அரச பரம்பரையை இன்றைக்கு வரை போற்றிக் கொண்டாடுகிறது இங்கிலாந்து ; இங்கிலாந்து மக்கள். வெறுமனே இராமயணம், மகாபாரதத்தை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்த- கைபர் போலன் கணவாய் வழியாக நுழைந்த ஆரிய இனத்திற்கு ஆயிரக்கணக்கான கோயில்கள், இறையிலி என அழைக்கப்பட்ட கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடைகள். சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்டது இறையிலி தேவதானம், திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி திருவிடையாட்டம், சமன பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம், பார்ப்பனியர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி, மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம், புலவர்களுக்கு முற்றூட்டும், சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் என தமிழன் வாரி வாரிக் கொடுத்தான் ஆரியர்களுக்கு. ஏராளமான செல்வ வாய்ப்புகள் வழங்கப் பட்டு தகுதி வழங்கப் பட்ட ஆரியர்கள் இந்தியாவில் என்றால், நாடு கடத்தப் பட்டு, நீரும் உணவும் பலநாட்கள் இல்லாமல், காய்ந்து தீய்ந்து கடலின் போக்கில் தெப்பத்தில் மிதந்து வந்த சிங்கள இனக்குழுவிற்கு மண்ணும், பொன்னும், வழங்கினர் தமிழர் இலங்கையில். உலகில் நன்றி கெட்டத் தனத்தில் ஆரியனுக்கும், சிங்களனுக்கும் எந்த இனமும் ஈடு இணையாக முடியாது. (நான் ஆரியனாகவோ, சிங்களனாகவோ பிறந்திருந்தால்: எம் இனத்தை வாழவைத்த, இந்தக் கொடைக்குணம் மிக்க தமிழனையும், தமிழையும் வானாளவ பாராட்டி கொண்டாடியிருக்கலாமே என்ற ஏக்கம் உண்டு.) இந்தியாவில் தமிழகத்தை தாமரை மலரும் சேறாக்க தமிழிசை போன்ற தன்மானம் அற்றதுகள் முயன்றாலும், தொன்மை, பொருளாதாரம், பண்பாடு, சுந்தர் பிச்சை போன்ற உலகளாவிய தலைமைத்துவம், உலகை திரும்பிப் பார்க்க வைத்த சல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம் போன்றவற்றால் இந்தியாவை தமிழன் வழிநடத்துவதை யாரும் தாண்டிச் சென்று விட முடியாது. அனால் இலங்கை: தமிழினப் பாதுகாப்பில் இருந்து முற்றாக விலகி விட்டது. சிங்கள இனம் உலகின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி விட்டது. உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சந்தித்து நடுங்கி வரும் மதவாத தீவிரவாதம் இலங்கையில் கால்கோள் விழாவை 350 உயிர்களை பலியாக்கி தொடங்கி விட்டது. இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கிறது. ஆனாலும் ஒன்றும் அச்சமில்லை! நேற்று தமிழீழம் கேட்டு போராடிய தமிழனில் எஞ்சிய கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கிற தமிழன், இன்று மதங்களுக்கு எதிராக நின்று இலங்கையை மீட்டுத் தருவான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,134.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.