Show all

புகார் சாதனை வங்கி இந்திய மாநில வங்கியாம்! 47ஆயிரம் புகார்கள் குவிந்தன இந்த வங்கியின் மீது

கடந்த, ஓராண்டு காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 விழுக்காடு அதிகம். அவற்றில், 96 விழுக்காடு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: புகார்களை வாரிக் கட்டிக் கொள்வதில் இந்திய மாநில வங்கி முதலிடத்தில் உள்ளது. 47ஆயிரம் புகார்கள் குவிந்தன இந்த வங்கியின் மீது. அடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி, 12 ஆயிரம் புகார்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, சிட்டி பேங்க் மீது, 1,450 புகார்கள் கூறப்பட்டுள்ளன.
வங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என்பன 22.1 விழுக்காட்டுப் புகார்கள். ஆதாய அட்டை தொடர்பாக, 15.1 விழுக்காடு கடன் அட்டை தொடர்பாக 7.7 விழுக்காடு வலைதளம் வாயிலான வங்கிச் சேவை குறித்து, 5.2 விழுக்காட்டுப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம், முன்கூட்டியே தெரிவிக்காமல் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், வைப்பு, நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது போன்றவை தொடர்பாக, தலா, 5 விழுக்காட்டுப் புகார்கள் வந்துள்ளன.
நடுநிலைநியாயம் மூலம் தீர்வு காணப்பட்ட புகார், 42.4 விழுக்காட்டில் இருந்து, 65.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. இதனால், வங்கிகள் மீதான புகார் பரிசீலனை செலவினங்கள் குறைந்து வருகின்றன. ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயில் இருந்து, 3,504 ரூபாயாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,134.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.