Show all

ராகவா லாரன்சின் அடுத்த புதியபடம் பெரிய செலவுத்திட்டத்தில்! பேய் படந்தான் ஆனால் காஞ்சனா 4 இல்லை

தமிழ்ராக்கர்சுக்கு பெப்பே! இந்த முறை ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தை முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாரிக்கிறார். முப்பரிமாணப் படங்களைத் திரையரங்கில் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள்.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் காஞ்சனா 3. இப்படத்தில், ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கோவை சரளா, ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, தேவதர்ஷினி, சிறிமன் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் உலகம் முழுவதும் வெளியான காஞ்சனா 3. ரூ.100 கோடிக்கு அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது என்று வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதியில் காட்சியில் காஞ்சனா 4 படமும் விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெரிய வரவு செலவுத் திட்டப் படத்தை இயக்குவதற்கு ராகவா லான்சை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, உருவாகும் பெரிய வரவு செலவுத் திட்டப் படம் காஞ்சனா 4. தான். திகில் கலந்த பேய் படந்தான் ஆனால் தற்போது இந்தப் படத்திற்கு கால பைரவா என்று தலைப்பு வைத்துள்ளனர். 
இப்போதைக்கு இந்தப் படம் குறித்து, முப்பரிமாண தொழில் நுட்பத்தில் இந்தப் படம் தயாரிக்கப் படுகிறது என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,134.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.