பதினைந்து மாதகாலமாக கொரோனா அச்சத்தில் முடங்கியிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். முதலாவது நாடு வங்காளம். 26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திரா காலத்து ஆட்சியில் இந்தியாவின் உதவியோடு விடுதலை பெற்ற நாடு வங்காள நாடு. வடக்கிலே வங்காள மொழிக்கு சில ஆண்டுகள் போhhட்டத்திலேயே தனிநாடு உருவாக்கித் தர முனைந்தது காங்கிரஸ் அரசு, இந்திய விடுதலையின் போது, உருது மொழி நாடான மேற்கு பாகிஸ்தானும், வங்காள மொழி நாடான கிழக்கு பாகிஸ்தானும் மத அடிப்படையில் ஒரே முகமதிய நாடாக விடுதலை பெற்றது. மத அடையாளத்திற்காக மொழி அடையாளத்தை இழக்க விரும்பாத கிழக்கு பாகிஸ்தான், தொடர்ந்து போராடி வங்காள நாடாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றது. தற்போது வங்காள நாடு சிறப்பாக 50-வது விடுதலை நாளைக் கொண்டாடவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளவே பதினைந்து மாதகாலமாக கொரோனா அச்சத்தில் முடங்கியிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி 13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122 (26.03.2021) வெள்ளிக் கிழமையன்று வங்காள நாட்டிற்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.