Show all

முக. ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கடுங்கண்டனம்! மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு

மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு முக.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்தியக் குடிஅரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க ஸ்டாலின் கீச்சுவில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்வர் மமதா பானர்ஜி நேற்று தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் மம்தா பானர்ஜி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இடது காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மம்தா மீதான தாக்குதல் குறித்து அறிந்த அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.