Show all

சொந்த மக்கள் மீது ஆதிக்கம்- வெளிஆதிக்கத் துறப்பு! இந்தியன் எண்ணெய் நிறுவன கொள்கலன்களைத் திரும்பப்பெற இலங்கை முடிவு

உள்நாட்டின் சொந்த மக்களான தமிழர்களை மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தி இனஅழிப்பு வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கை- வெளிநாடுகள் தங்கள் மண்ணில் தொழிலில் ஈடுபடுவதைக் கூட தங்கள் மீதான ஆதிக்கமாக கருதி, அதற்கான தீர்வுகளாகத் தங்களை அதிலிருந்து விலக்கிக் கொள்ள முயல்கிறது, இலங்கை சிங்களப் பேரினவாத அரசு. அந்த வகைக்குத் தற்போது இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு செய்துள்ளது.

07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்தவர்கள் மீது திணிக்கிற விதி தனக்கில்லை! இந்தக் கோட்பாடு இரண்டு உலகப்போர்களைச் சந்தித்தும், ஆதிக்க சக்திகள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதையே உலகின் ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையும்- வெளியுறவுக் கொள்கையும் புலப்படுத்தி நிற்கிறது. 

ஆம் உள்நாட்டில் சொந்த மக்களை மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தி இனஅழிப்பு வேலைகளைத் தொடர்ந்து கொண்டேயிருப்பது- அடுத்த நாட்டின் வணிகம் தொழில் சார்ந்த பொருளாதாரத் தொடர்புகளைக்கூட- மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தும் இனஅழிப்பு வேலைகளாகக் கருதி அதற்கு தடை விதிப்பது, மறுதளிப்பது என்பதாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அவை.

உள்நாட்டின் சொந்த மக்களான தமிழர்களை மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தி இனஅழிப்பு வேலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கை- வெளிநாடுகள் தங்கள் மண்ணில் தொழிலில் ஈடுபடுவதைக் கூட தங்கள் மீதான ஆதிக்கமாக கருதி, அதற்கான தீர்வுகளாக தங்களை அதிலிருந்து விலக்கிக் கொள்ள முயல்கிறது, இலங்கை சிங்களப் பேரினவாத அரசு.  அந்த வகைக்குத் தற்போது இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு செய்துள்ளது.

இலங்கை விடுதலைக்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட 99 எண்ணெய் கொள்கலன்கள், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் டாலர் ஆண்டுக் கட்டண அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகையில் விடப்பட்டன. 

தற்போது அதற்கு சிலோன் பெட்ரோலிய கழக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக காரணம் தெரிவிக்கப்பட்டு, அந்த எண்ணெய் கொள்கலன்களை இலங்கை அரசு திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு எண்ணெய்க்கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்கான இலங்கை, இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு நீக்கம் செய்தது.

அதற்கு வருத்தம் தெரிவித்த இந்தியா, ஒப்பந்த பொறுப்புக்கு கட்டுப்பட்டு இலங்கை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்பாட்டில் தனது அதிருப்தியை ஜப்பானும் வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இலங்கையின் கிழக்குப் பகுதி துறைமுகமான திரிகோணமலையில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்பு கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் இலங்கையின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாகவும், எனவே திரிகோணமலை எண்ணெய் கொள்கலன்கள் அனைத்தும் விரைவில் நாட்டுக்கு சொந்தமாகிவிடும் என்றும் கம்மன்பில கூறினார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை நீக்கம் செய்த சூட்டோடு, எண்ணெய் கொள்கலன்களையும் திரும்பப் பெறும் இலங்கை அரசின் முடிவு, இந்திய-இலங்கை உறவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று சிலராலும், அடப்போங்கப்பா! தமிழ் இனஅழிப்பு வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கைப்பாட்டில்- ஹிந்திபேசும் தலைமைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வரும் இந்தியா எப்போதும் சலசலக்கவெல்லாம் செய்யாது என்று சிலராலும் பேசப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.