வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள், மூன்றாவது மாதத்தை நோக்கி டெல்லியில் போராடுவது- அவர்களுக்கான பிழைப்பு மாதிரி- தீர்வு வழங்க வேண்டிய அரசு, நியாயப்படுத்த வேண்டிய ஊடகங்கள், பரபரப்பாக வேண்டிய மக்கள் யாரும் கண்டுகொள்ளவே காணோம். 06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டத்தின் அடுத்த கட்டமாக உழவர்கள் இன்று தொடர்வண்டி மறியலில் ஈடுபட உள்ளனர். இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிக்கும் வகைக்கான புதிய வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, டில்லி எல்லை பகுதிகளில், மூன்றாவது மாதத்தை நோக்கி உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் தீவிரப்பாடாக இன்று பகல், 12:00 முதல், மாலை, 4:00 மணி வரை, நாடு முழுதும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக, உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், இருப்புப்பாதை சிறப்பு பாதுகாப்பு படையின், 20 பிரிவினர், கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.