Show all

இலங்கை அரசு, குழு அமைத்து ஆய்வு! தமிழர்களிடையேயான புலிகள் ஆதரவு நிலையை தடுப்பது எப்படி என்பது குறித்து

32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் அமைதியான, மக்கள் நல ஆட்சியை அங்கிகாரம் பெறாமல் நடத்தி வந்தனர். அந்தப் பகுதிகள் தனி ஈழம் போல காவல்துறை, வங்கிகள், கல்வி நிறுவனங்கள் தனி நாணயம் என்றெல்லாம் முன்னெடுக்கப் பட்டிருந்தன. 

ஆனால் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மட்டும் ஒரு புறம் நடந்து கொண்டேயிருந்தது. விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டு வந்தனர்.

விடுதலைப் புலிகளால் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல இலங்கை மக்களுக்கும், ஏன் தமிழ் மக்களுக்கும் ஆபத்து இருப்பது போல உலக நாடுகளிடம் எல்லாம் முறையிட்டு, இராணுவ உதவிகளையும், ஆலோசனைகளையும் இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் பெற்று விடுதலைப் புலிகள் மீதான இறுதிப் போருக்குத் தயாரானது இலங்கை.

ஓன்பது ஆண்டுகளுக்கு முன்னம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தது; தமிழ்ப் பொதுமக்களும் பலர் பலியாகினர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதில் வெளிநாடுகளின் உதவி பெறும் போது, தமிழ்ப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான தகுதிகள் வழங்குவது போல வாக்குறுதி அளித்திருந்தது இலங்கை.

கடந்த ஒன்பதாண்டுகளாக தமிழர் பகுதிகளில் நிறுத்தப் பட்ட இராணுவத்தைக் கூட திரும்ப அழைத்துக் கொள்ள வில்லை. தமிழர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை அமைத்துக் கொள்ள காவல்துறை உரிமையும் அளிக்கப் படவில்லை.

இந்த நிலையில் தாம் தமிழர்கள் விடுதலைப் புலிகள் நினைவுகளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இதனால் இலங்கை பீதியில் உறைந்து போய் உள்ளது.

ஈழத் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதா? என இலங்கை அரசு திடீர் ஆய்வு நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து ஈழத் தமிழர்கள் பேச இயலாத நிலை இருந்தது வந்தது. தமிழர்கள் கடைபிடித்து வந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளும் வெளிப்படையாக நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அப்படியான நிலைமை தமிழர்களிடம் இல்லை. மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகியவை பகிரங்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சும் அதிகரித்துள்ளது. அண்மையில் அமைச்சராக இருந்த விஜயகலா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து அவரது பதவியைப் பறித்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் திலீபன், கிட்டு ஆகியோரது சிலைகளை சீரமைக்கக் கோரி யாழ்ப்பாண மாநகரசபையில் உறுப்பினர்கள் தீர்மானமும் நிறைவேற்றினர். இப்படி தமிழர்களிடம் மீண்டும் அதிகரித்து வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை இலங்கை அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தமிழர்களின் இந்த மனோநிலை குறித்து ஆராய இலங்கை அரசு உயர்நிலைக் குழு ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் அனுப்பி வைத்தது. இக்குழுவில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், சட்டம் ஒழுங்கு இணை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழர்களிடையேயான புலிகள் ஆதரவு நிலையை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,850.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.