Show all

மோடி பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென சரிந்த கூடாரம்! 20 பேர் படுகாயம் மேற்கு வங்கத்தில்

32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 மேற்கு வங்கத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர். 

மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மோடி உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் திடீரென சரிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது. 

20க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மோடி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,850.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.