32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உழவர்கள் அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது: மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து உழவர்கள் ஆதரவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் சட்டப்பேரவையில் உழவர்கள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதுபோல, உழவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசாத 112 சட்டமன்ற உறுப்பினர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக உழவர்கள் கருத்துப் பரப்புதல் செய்வார்கள். இந்த 112 சட்டமன்ற உறுப்பினர்களில் 86 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 24 பேர் காங்கிரஸ் மற்றும் 2 பேர் சுயேச்சைகள் ஆவர் என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,850.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



