Show all

தோல்வி! அரசியலை அடுத்து வாழ்க்கையிலுமா? டிரம்ப் பாவம் மெலானியா

வெளியாகியிருக்கும் அதிர்ச்சித் தகவல், அரசியலை அடுத்து வாழ்க்கையிலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பிற்கு மணவிலக்கு அளிக்க காத்திருக்கிறாராம் மெலானியா.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டெனால்ட் டிரம்ப் பெரும் தோல்வியை சந்தித்தார். வீர வசனங்கள் பல பேசிய அவர், கடைசியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிரம்பின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில், தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டெனால்ட் டிரம்பிற்கு அவரது மனைவி மெலானியா மணவிலக்கு கொடுக்க இருப்பதாக, டிரம்பின் முன்னாள் நிர்வாக உதவியாளர்கள் பலர், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்காக, மெலானியா காத்திருப்பதாகவும், அதன்பிறகு, அவருக்கு மணவிலக்கு கொடுக்க இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

டிரம்பிற்கும், மெலானியாவிற்கும் 25 ஆண்டுகள் அகவை வேறுபாடு இருப்பதால், தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.