தமிழகத்தில் காங்கிரசும் பாஜகவும் விரும்பப் படாதது ஏன் என்ற தேடலில் கிடைத்த விடையாக, தமிழர்கள் அறிவு சார்ந்து இயங்குவதையும் வட இந்தியர்கள் நம்பிக்கை சார்ந்து இப்படிப் பலவற்றை இழந்து கொண்டிருப்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது. 23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் சாதித்த வகையில் தமிழகம் பெற்றிருப்பதில்- வட இந்தியாவில் காங்கிரசும் பாஜகவும் சாதிக்கததால், வட இந்தியர்கள் எதை இழந்தார்கள் என்ற பட்டியல் இடம் பெற்ற செய்திகள் தொடர்ந்து அதிக விருப்பம் பெற்றும் நிறையப் பகிரப்பட்டும் வருகின்றன. வடஇந்தியர்கள் இழந்தவைகள் பட்டியல்:-
சமூகநீதி அடிப்படையிலான கல்வி.
கல்வி மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள்.
மருத்துவம் மற்றும் சுகாதாரம்
வேலைவாய்ப்புகள், சமுக மற்றும் பொருளாதார வளர்ச்சி.
அடிப்படை வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள்.
பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள்.
சுயமரியாதை, உணவு சுதந்திரம், கலாச்சார சுதந்திரம் மற்றும் ஆடை சுதந்திரம்.
நல்ல உட்கட்டமைப்புடன் கூடிய சாலை போக்குவரத்து வசதிகள்
மொழி உரிமை மற்றும் அதிகாரம்.
தாய் மொழியை இழந்தார்கள்.
கல்வி, மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவாத ஹிந்தியை கற்கும் நேரமிழப்பு.
உயர் ஜாதியினரின் ஆதிக்கம் இன்னுமும் தொடர்கிறது. ஜாதிய அடக்கு முறை, வன்முறை இன்னமும் தொடர்கிறது.
மத துவேசம், மத அடிப்படையிலான மோதல்கள் பெற்றார்கள்.
இப்படியாக வட இந்தியர்கள் இழந்த அனைத்தையும், திமுக, அதிமுக ஆட்சியால் தமிழர்கள் பெற்றார்கள் மற்றும் வட இந்தியர் பெற்ற சமுகம் சார்ந்த வன்முறைகளை தமிழர்கள் இழந்தார்கள்.
ஹிந்தியை புறக்கணித்ததால், தமிழர்கள் பல்வேறு வகையில் உலகளாவிய பலன்களையும் நலன்களையும் பெற்றுள்ளார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



