கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை தலைநகர் கொழும்பில் சீனா உருவாக்கி வரும் துறைமுக நகரத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட உள்ள நிலையில், இதற்கு இலங்கையில் தொடர்ந்து எதிர்ப்புக்கள் இருந்து வருகின்றன. மன்னார் வளைகுடா கடற்பரப்பில் பேரளவான காற்றாலைகளை அமைக்க சீனாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது இலங்கை. இந்த நிலையில், கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் சரக்கு கப்பல் ஒன்று அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்தது. ஆனால் அந்த சரக்குக் கப்பலில் அணு ஆயுத தயாரிப்புக்கான கதிரியக்கத்தை வெளியிடக் கூடிய மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அதிர்ந்து போன இலங்கை துறைமுக அதிகாரிகள், அந்தக் கப்பலுக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். தற்போது அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வெளியே கடலிலேயே சீனாவின் சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலை தொடர்ந்து இயக்குவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாலேயே இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்ததாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா உருவாக்கி வரும் கொழும்பு துறைமுக நகர், விரிவாக்கம் செய்யும் அம்பந்தோட்டா துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிரான தளமாக சீனா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு அறைகூவல்கள் காத்திருக்கின்றன என்றும் அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து இந்தியாவை எச்சரித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி, நடப்பு பாஜக ஆட்சியானாலும் சரி, தொடர்ந்து ஆளுமைப் பொறுப்பில் இருக்கிற வடஇந்தியத் தலைவர்கள் தங்கள்தம், தமிழர் எதிர்ப்பு நிலையை, சிங்களவர்களுக்கு ஆதரவாக்கித் தந்து கொண்டிருக்;கின்றனர். ஆனால் இலங்கை சிங்களவர்களோ- இந்திய எதிர்நிலைப்பாடு உள்ள சீனாவின் பிடியில் பிணைத்துக் கொள்ளவே பெரிதும் விரும்புகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.