தமிழ்நாட்டில் 12.1 தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வருகிறது. வீணடிப்புக்கு நிருவாக குறைபாட்டை மட்டுமே காரணமாக்கிவிட முடியாமல், பாதுகாப்பு காரணம் பற்றி வீணடிப்பு தவிர்க்க இயலாதது என்றும் தெரியவருகிறது. 08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தடுப்பூசிகள் 10 எண்ணங்கள் அல்லது 20 எண்ணங்கள் என்று ஒரு குப்பியில் வரும். ஒரு குப்பியை திறந்த பிறகு நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து எண்ணங்களும் பயன்படுத்தப்பட்டு விடவேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் மாலையில் முடியும் போது கூடுதலாக தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படாமல் இருந்தால் அவை அடுத்த நாளுக்காக எடுத்து வைக்க முடியாது. இப்படி தமிழ்நாட்டில் 12.1 தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும், இதுவரை 12.1விழுக்காடு தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. தகவலறியும் உரிமைசட்டம் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. உலக நலங்கு நிறுவனம் தடுப்பூசி வீணாகுதல் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. கடந்த மாதத்தில் இருந்து 65 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 அகவைக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 18 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கவேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிசீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மேலும் 8,82,130 கோவாக்சின் வந்துள்ளன. மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இதில் நேற்று வரை 48 லட்சத்து 7 ஆயிரத்து 148 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கையிருப்பு 4.1 லட்சம் உள்ளது. இந்த அடிப்படையில், சுமார் 3 லட்சம் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளன. தடுப்பூசி வீணாதல் என்பது வெறுமனே நிருவாகம் சார்ந்தது மட்டுமானதாக அல்லாமல், சரியான பாதுகாப்பு முன்னெடுப்பில் தடுப்பூசி வீணடிப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது என்கிற காரணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.