கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோன தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக அமெரிக்கர்கள் பெரும்பாலோனோர் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் வீட்டில் ஓய்வு நேரத்தின் போது உணவுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 300 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் சமையல் தொடர்பான காணொளிகள் கடந்த ஆண்டை காட்டிலும் 31 விழுக்காடு அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. இதே போல் இயங்கலை மருந்தகத்திற்கான தேடல்கள் உலகளவில் 100 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று (ஊரடங்கு) உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், நுகர்வோரின் நலன்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றை மாற்றியுள்ளன. மேலும் இந்த நெருக்கடி எப்படி அல்லது எப்போது தீர்க்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது என்றாலும், மக்களின் தேவைகள் மற்றும் நடத்தைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய புதிய நுண்ணறிவு எங்களிடம் உள்ளது, என்று கூகுள் விளம்பர குழு கூறி உள்ளது. கவலை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க மக்கள் இயங்கலை காணொளியை நோக்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில், தியானம் தொடர்பான காணொளிகளின் பார்வைகள் 51 விழுக்காடு அதிகரித்துள்ளது பள்ளி மூடல் மற்றும் வீட்டிலேயே கல்விக்கு ஏற்ப பெற்றோர்களும் மாணவர்களும் வலையொளியை அதிகம் பார்க்க தொடங்கி உள்ளனர். வலையொளித் தரவுகளின்படி, உலகளவில் ‘வீட்டுப்பள்ளி’ கொண்ட காணொளிகளின் காட்சிகள் 120 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. மேலும் “விளையாட்டுகள்,” “புதிர்கள்” மற்றும் “வண்ணமயமான புத்தகங்கள்” ஆகியவற்றிற்கான தேடல் ஆர்வம் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



