Show all

ஆண்களும் பெண்களுமாக வரிசை கட்டும் பெங்களூர் மக்கள்! நேற்று மதுக்கடைகள். இன்று பூங்காக்கள்

பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

பெங்களூர் பூங்காக்களுக்குப் பெயர் பெற்ற நகரம். அதிகாலை நேரத்தில் எல்லா பூங்காவிலும் பெங்களூர் மக்கள் சாரை சாரையாக நடை பயிற்சிக்கு கூடுவது வழக்கம். பெங்களூரின் எந்த ஒரு பகுதியிலும் பூங்கா இல்லாமல் இருக்காது. நகரின் இதமான தட்ப வெப்பத்திற்கு, இந்த பூங்காக்கள் ஒரு முதன்மையான காரணம். மிக நேர்த்தியாக, அங்குள்ள மரங்களும், செடிகளும் பேணப்படுவது பெங்களூரின் சிறப்பு. 

காலை, மாலை பெங்களூரு நகர மக்களின் வாழ்க்கையில் இரண்டர கலந்து போன ஒரு முதன்மைப்பாடு இந்த பூங்காக்கள். ஊரடங்கு உத்தரவால் பூங்காக்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. பேணுதல் பணியாளர்கள் மட்டும் சென்று வந்தனர். இந்த நிலையில்தான் இன்று முதல் மாநிலம் முழுக்க பூங்காக்களை திறப்பதற்கு அரசு உத்தரவிட்டது. 

காலையில் 7 மணி முதல், 9 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 மணி வரை என தலா இரண்டு மணி நேரங்கள் பூங்காக்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையிலேயே, ஆண்கள், பெண்கள், முதியவர்கள், மூதாட்டிகள் என பூங்காக்களை நோக்கி படையெடுத்தனர். அதிலும் நகரின் நுரையீரல் என்று அழைக்கப்படக்கூடிய, மிகப்பெரிய பூங்காக்களான லால்பூங்கா மற்றும் கப்பன் பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். அனைவருக்கும் முகமூடி கட்டாயம் என்று கூறப்பட்டது. நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுடன், ஆண்கள், பெண்கள் பலரும் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. 

இரண்டு மாதங்களுக்கு பிறகு, அவர்கள் ஓட்டம், நடை என்று தங்களது செல்லமான பூங்காவில் இரண்டர கலந்து மகிழ்ந்தனர். மதுக் கடை வாசல்களில் பெங்களூர் பெண்கள் தனி வரிசை கட்டிய வருத்தம்-  தற்போது அதே ஆர்வத்தோடு, ஏன் இன்னும் கூடுதலாகவே கூட்டம் முண்டியடித்தது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆனாலும் சமூக இடைவெளியும், பாதுகாப்பும் முதன்மைப்பாடு என்பதை பெங்களூர் மக்கள் மறந்துவிடக் கூடாது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.